ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக மத்திய அரசு மாற்றியது ஏன் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் உள்ள பர்சேத்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை நள்ளிரவு 1.30 மணிக்கு நீக்கியது ஏன் என்று வினவினார். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பிரதமர் மோடி அஞ்சுவதாக அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் தொழிலதிபர்களின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்வதாக ராகுல்காந்தி கடுமையாக சாடினார்.
ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக மாற்றியது ஏன்? -ராகுல் கேள்வி
-
By Web Team
Related Content
மெகா ஒப்பந்தம் போட்ட ஏர் இந்தியா !
By
Web team
February 15, 2023
சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரில் தொடங்கியது !
By
Web team
February 13, 2023
ஒருமித்த கருத்துகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை - பிரதமர்!
By
Web team
January 31, 2023
கொட்டும் மழையில் நடைபெற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி !
By
Web team
January 30, 2023
பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப் மற்றும் டுவிட்டரில் வெளியிட தடை!
By
Web Team
January 22, 2023