பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப் மற்றும் டுவிட்டரில் வெளியிட தடை!

குஜராத் கலவரம் தொடர்பான பாரத பிரதமர் மோடி அவர்களை குறிப்பிடும் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டுள்ளது. மேலும் பிபிசி தனது டிவிட்டர் தளத்திலும் இச்செய்தியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் மோடி குறித்தான ஆவணப்படத்தை யூடியூப் தளத்திலும் டிவிட்டர் தளத்திலும் வெளியிடுவதற்கு மத்திய அரசு பிபிசிக்கு தடை விதித்துள்ளது.

குஜராத் கலவரமானது இந்தியாவையே உலுக்கிய சம்பவமாகும். கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 வாக்கில் அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை கோத்ரா தொடர்வண்டி நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இதில், அந்த தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். இந்தக் கலவரம் நடந்த சமயம் குஜராத்தின் முதல்வராக தற்போதைய பாரத பிரதமர் மோடி அவர்கள் பதவி வகித்திருந்தார். பிரதமர் மோடி மீதான அன்றைய குஜராத் எதிர்கட்சிகள் தொடுத்த குற்றச்சாட்டுகளின் மீது எழுந்த வழக்கினை கடந்த 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்குத் தொடர்பாக பிபிசி நிறுவனமானது “India: The Modi Question” என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை ஜனவரி 17ஆம் தேதி செவ்வாயன்று வெளியிட்டது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முற்றிலும் மாறாகவும், எதிராகவும் இருந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்த கருத்தின்படி, “இந்த ஆவணப்படம் இந்தியாவில் திரையிடப்படவில்லை, இப்படம் அதனை வெளியிட்ட ஏஜென்சியின் பிரதிபலிப்பு, மேலும் இதுவொரு மதிப்பிழந்த கதையை முடித்து வைப்பதற்கு உருவாக்கப்பட்ட பிரச்சாரமாகும்” என்று அவர் தெரிவித்தார். இதன் பின்னர், இந்த ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் தன்னுடைய யூடியூப் தளத்திலும் டிவிட்டர் தளத்திலும் வெளியிட மத்திய அரசு தடை வித்துள்ளது.

 

Exit mobile version