கொட்டும் மழையில் நடைபெற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி !

கடந்த 26 ஆம் தேதி இந்தியாவின் 74 வது குடியரசு தின விழா, டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மூவர்ணக் கொடியை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஏற்றி வைத்து அணிவகுப்பைப் பார்வையிட்டார். விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள், சிறப்புப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்றார். இதையடுத்து குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியிலுள்ள விஜய் சௌக் பகுதியில் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துக்கொண்டு முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version