பிரபல செய்தி நிறுவனத்தின் ஊழியர் செய்த காரியத்த பாருங்களேன்!

உலக அளவில் புகழ்பெற்ற பிபிசி செய்தி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், ஆபாச படங்களை பெறுவதற்காக 3 ஆண்டுகளாக சுமார் 38 லட்சம் ரூபாய் வரையில் டீன் ஏஜ் நபர் ஒருவருக்கு பணம் கொடுத்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. வெளிப்படைத்தன்மைக்கு புகழ்பெற்ற ஊடகமொன்றின் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஊழியர் பணியாற்றிய உலக புகழ்பெற்ற பிபிசி செய்தி நிறுவனமே இது.

இங்கிலாந்து நாட்டில் இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற பிபிசி செய்தி நிறுவனத்தின் ஊழியர் மீது, டீன் ஏஜ் நபர் ஒருவரின் பெற்றோர் பாலியல் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் வெளியிட்டுள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

அதன்படி பிபிசி செய்தி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், டீன் ஏஜ் நபருக்கு ஆபாச படங்களை அனுப்புவதற்காக, அவரது 17 வயதில் இருந்து சுமார் 38 லட்சம் ரூபாய் பணம் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பற்றி அந்நபரின் குடும்ப உறுப்பினர்கள் கடந்த மே மாதம் பிபிசியிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து வாய் திறந்துள்ள இங்கிலாந்து கலாச்சார மந்திரி லூசி பிரேசர், ஆழ்ந்த வருத்தங்களை ஏற்படுத்தக் கூடிய இந்த குற்றச்சாட்டுகள் பற்றி பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் பேசியுள்ளதாகவும், இதுபற்றி விரைவாகவும் மற்றும் உணர்வுப்பூர்வமான முறையில் விசாரணை நடத்தப்படும் என அவர் தனக்கு உறுதியளித்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே டீன் ஏஜ் நபரது பெற்றோரின் கூற்றை பிபிசி செய்தி நிறுவனமும் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆண் பணியாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட அந்த டீன்-ஏஜ் நபர் ஆணா, பெண்ணா என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவிலை.

கடந்த மே மாதத்தில் பிரபல டே டைம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிலிப் ஸ்கோபீல்டு, சக பணியாளருடன் வைத்திருந்த உறவின் காரணமாக பணியில் இருந்து விலகினார். அப்போது அந்த உறவினை புத்திசாலித்தனமற்ற ஆனால், சட்டவிரோதம் அல்லாதது என பிலிப் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து ஊடகங்களில் பணியாற்றுவோர் தொடர்ந்து பாலியல் சர்ச்சைகளில் சிக்கிவருவது உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

Exit mobile version