மார்ச் 29 2016 , பாகிஸ்தான் ஒரு வீடியோ வெளியிடுகிறது. அதில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் இந்தியாவிற்காக உளவு பார்த்த ஒருவரை கைது செய்துள்ளோம் என்று அறிவிப்பு வெளியாகிறது.
மேலும் , இந்த அளவுக்கு உயர் பதவியிலிருக்கும் புலனாய்வுத் துறை அதிகாரியோ, ராணுவ அதிகாரியோ மற்றொரு நாட்டில் கைதுசெய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய சாதனை” என்றும் சொன்னது பாகிஸ்தான்.
சரி யார் அவர் ? அப்படி என்ன உயர்பதவியில் இருந்தார். கைது செய்யுமளவிற்கு என்ன செய்தார். ?
1991 ம் ஆண்டு இந்திய கப்பற்படையில் இணைந்தவர் இந்த குல்பூஷன் ஜாதவ்.
பலுசிஸ்தான் பகுதியில் இருந்துகொண்டு கப்பல்படையில் வேலைபார்த்த அவர் பாகிஸ்தானை அழிப்பதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளில் பின்னிருந்து வேலை பார்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டை வைத்தது பாகிஸ்தான்.அவர் இந்தியர்தான் என்பதை ஒப்புக்கொண்ட இந்திய அரசாங்கம் அவர் மீதான இந்தியாவுக்கான உளவுக்குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால், பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் தலையீடு இருப்பதை இதன் மூலம் நாங்கள் உறுதி செய்கிறோம் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்க,அதற்கு மறுமொழி சொல்லும் விதத்தில், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் சொரூப் இதை முற்றிலுமாக மறுத்தார். அதோடு இவரது உடல்நிலை குறித்து கவலைப்படுவதாகவும் தெரிவித்தது இந்திய வெளியுறவுத்துறை.
2016 ம் ஆண்டு மார்ச் 3 ம் தேதி பலுசிஸ்தானில் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படும் இவருக்கு பாகிஸ்தான் ராணுவ் அநீதிமன்றம் மரண தண்டனை விதித்து திர்ர்ப்பளித்தது.
ஆனால் இந்தியாவோ , இவர் பாகிஸ்தானில் கைது செய்ய்ப்படவே இல்லை. ஈரானிலிருந்து கடத்தப்பட்டுள்ளார் என்று பதில் தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழகை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை விதித்தது.
பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த வழக்கில் இன்று நடைபெறும் விசாரனையில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் தரப்பில் முத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதிட்டு வருகிறார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பரஸ்பர பகையை தாண்டி, புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறையாத இந்த வேளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளதால் பரபரப்பு மிகுந்த வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
#justiceforjadhav
Discussion about this post