அதிக ஏலம் போகும் வீரர் யார்? எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்

2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெறவுள்ள நிலையில், 2008ம் ஆண்டு தொடங்கி 2020ம் ஆண்டு வரை அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

இந்தியாவில் கிரிக்கெட்டும் ஒரு மதம். அதன் திருவிழா தான் ஐபிஎல் தொடர். 2008ம் ஆண்டு தொடங்கிய இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான், பஞ்சாப், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெக்கான் என 8 அணிகள் களம் கண்டன.

2008ம் ஆண்டு முதன்முறையாக அரங்கேறிய ஐபிஎல் போட்டியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிகபட்சமாக 10 கோடியே 93 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

2009ம் ஆண்டு ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளிநாட்டு வீரரான ஆண்ட்ரூ பிளின்டாப்பை 11 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

2010ம் ஆண்டு ஷேன் பாண்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிரோன் பொல்லார்டை மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு அதிகபட்சமாக ஏலத்திற்கு எடுத்தது.

2011ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கவுதம் கம்பீரை 14 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து 2011ம் ஆண்டின் அதிக விலை போன வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் நிற்க வைத்தது.

2012ம் ஆண்டு 12 கோடியே 8 லட்சம் ரூபாய்க்கு ரவீந்திர ஜடேஜாவை ஏலம் எடுத்து சென்னை அணி தன்வசம் ஆக்கி கொண்டது 

2013ம் ஆண்டு ஐபில் தொடரில் மேக்ஸ்வெல்லை 7 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஏலம் எடுத்ததில் 2013ம் ஆண்டின் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெயரை பெற்றார். 

2014ம் ஆண்டு யுவராஜ் சிங்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 கோடிக்கு அதிகபட்சமாக ஏலம் எடுத்து அதிக விலை போன வீரர் என்ற பெயரை வாங்கி கொடுத்தது.

2015ம் ஆண்டு டெல்லி அணி யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

2016ம் ஆண்டு ஷேன்வாட்சனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு அதிகபட்சமாக ஏலத்திற்கு எடுத்தது. 

2017ம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ்-ஐ 14 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு புனே அணி ஏலத்திற்கு எடுத்தது

2018ம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ்-ஐ 12 கோடியே 50 லட்சத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகபட்சமாக ஏலத்திற்கு எடுத்தது

2019ம் ஆண்டு ஜெய்தேவ் உனட்கட்-ஐ 8 கோடியே 40 லட்சத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகபட்சமாக ஏலத்திற்கு எடுத்தது.

கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட 2020ம் ஆண்டு ஐபிஎல் ஒரு வழியாக செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதில் 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பேட் கம்மின்ஸ்-ஐ ஏலத்திற்கு எடுத்தது கொல்கத்தா அணி.

 

Exit mobile version