பள்ளி செல்லும் வயதில் காதல் டிகிரி படிக்க துடிக்கும் அந்த பப்பி லவ்வர்ஸ் யார்…?

படிப்பதோ பள்ளியில், இவர்கள் செய்யும் செயலோ வேற லெவலில், ”கண்ணே, மணியே” என LIVE ல் இவர்கள் கொடுக்கும் LOVE டார்ச்சரால் வெறி கொண்ட வேங்கையாகி இருக்கிறார்கள் 90’ஸ் கிட்ஸ்கள். பள்ளி செல்லும் வயதில் காதல் டிகிரி படிக்க துடிக்கும் அந்த பப்பி லவ்வர்ஸ் யார்…? பார்க்கலாம்.

வீடியோவில் இருக்கும் மீசை கூட அரும்பாத இந்த சின்னப்பகவதியின் பெயர் குட்டி வடிவேல் என்ற சஞ்சய், சென்னை வாழ் புள்ளிங்கோ. அவரை வெட்கத்தில் பூக்க செய்யும் இந்த சுடிதார் அணிந்த தண்ணீர் வாளியின் பெயர் சோபி, கடலூர் வாழ் காதல் சின்னம்.

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஏழே நாட்களில் கமிட் ஆகி இரண்டற கலந்த காதல் இவர்களுடையது. கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி ‘HI’ அனுப்பி கடலை விவசாயம் செய்த சோபியை 14 ம் தேதி ”LOVE U” சொல்லி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார் சின்ன பகவதி. இப்படி ஒரே வாரத்தில் ரெடியானதுதான் இவர்களின் உன்னத ”பாஸ்ட் புட்” காதல்.

கமிட் ஆகும் முன்பு வரை REEL ல் சோலாவாக PERFROM செய்து கொண்டிருந்த சின்ன பகவதி, கமிட் ஆன பின்பு தனது அக்கவுண்ட்டை காதலும் காதல் சார்ந்த நிலமுமாக மாற்றினார். பப்பீஸ் லவ்வர்ஸ் என்று நினைத்தவர்கள் ஒரு கட்டத்தில் பார்க்க முடியாத 12 மணி காட்சிகளை எல்லாம் பதிவேற்ற தொடங்கினார்கள்.

சுடச்சுட தயாரான பாஸ்புட் காதலின் தூதுவர்கள் வேறு யாருமல்ல. இவர்களது பெற்றோர்கள்தான். அத்தே, என்ற அடையாளத்தோடு அழுது வடியும் மருமகனுக்கு ஆறுதல் கூறும் பெண்ணின் குரல்தான் நெட்டிசன் இவர்களின் வீடியோவை கலாய்ப்பதற்கான கருப்பொருள். ”மாமியார் மருமகனுக்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்”.

வேலையும் கிடைக்காமல் காதலும் அமையாமல் ஏற்கனவே விரக்தியின் உச்சத்தில் இருந்த 90ஸ் கிட்ஸ்கள், இவர்களின் அலப்பறைகளை பார்த்து காண்டாகி இன்ஸ்டா ஐடியை ரிப்போர்ட் அடித்து தூக்கி விட்டார்கள். அதற்கு இந்த பப்பீஸ் லவ்வர் படுத்திய பாடு இருக்கிறதே…? ஐடி போனதுக்காக சின்னப்பகவதி அழுது ஆர்ப்பாட்டம் செய்வதும், அவரை நமது தண்ணீர் வாளி தேற்றுவதுமான அந்த காட்சிகளை காண்பவர் எவரும் கலாய்க்காமல் கடக்க முடியாது.

பள்ளிக்கு செல்லும் வயதில் பச்சை குத்தும் அளவிற்கு இவர்களின் காதல் வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு இவர்களின் பெற்றோர் முக்கிய காரணம். சிறு வயதில் ஏற்படும் ஈர்ப்புகளை காதல் என்று குழந்தைகள் புரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கு பெற்றோர்களே அப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள்…

தலையெழுத்து…

நியூஸ் ஜெ செய்திகளுக்காக ராம்குமார்…

Exit mobile version