செகண்ட் ஹேண்ட் கார்களை பயன்படுத்தும் பிரபலங்கள் யார் யார்? அதற்கான காரணங்கள் என்ன?
கோடி கோடியாய் சம்பாதிக்கும் விராட் கோஹ்லி உள்ளிட்ட பிரபலங்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதான்.
இந்தியாவின் யூஸ்டு கார் மார்க்கெட் மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டுள்ளது. செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் சாதாரண மாருதி கார் முதல் ரோல்ஸ் ராய்ஸ் லக்ஸரி கார் வரை அனைத்து வகையான கார்களும் கிடைக்கின்றன. புதிய கார்களை வாங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு செகண்ட் ஹேண்ட் கார்கள் ஒரு வரப்பிரசாதம்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இரண்டு பென்ட்லீ கார்கள் உள்ளன. இதில், ஒரு கார் டெல்லியிலும் மற்றொன்று மும்பையிலும் உள்ளது. விராட் கோலி பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை வாங்கியுள்ளார்.
யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்கிடம் லம்போர்கினி முர்சியலாகோ எல்பி640-4 கார் ஒன்று உள்ளது. பிக் பாய் டாய்ஸ் (Big Boy Toyz) எனப்படும் மிகவும் புகழ்பெற்ற லக்ஸரி யூஸ்டு கார் டீலரிடம் இருந்துதான் யுவராஜ் சிங் இந்த காரை வாங்கினார்.
ஷில்பா ஷெட்டி ரேஞ்ச் ரோவர்
பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியிடம் பென்ட்லீ மற்றும் லம்போர்கினி என ஏராளமான லக்ஸரி கார்கள் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் ரேஞ்ச் ரோவர் லாங் வீல்பேஸ் வெர்ஷன் காரை வாங்கியுள்ளார். இதுவும் கூட பிக் பாய் டாய்ஸில் இருந்து வாங்கப்பட்ட கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கும்போது அவற்றின் தரம் குறித்த சந்தேகம் அனைவருக்கும் எழும். ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது. கார்கள் நல்ல கண்டிஷனில் உள்ளதா?பலமுறை பரிசோதிக்கின்றனர். பல கார் டீலர்கள் தரமான யூஸ்டு கார்களை விற்பனை செய்கின்றனர். எனவே பிரபலங்கள் தயக்கம் இல்லாமல் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குகின்றனர்.இதன் மூலம் அவர்களுக்கு பணமும் சேமிக்கப்படுகிறது.