திரையில் இந்த காம்பினேஷன் அமைஞ்சா எப்படி இருக்கும்…

பொதுவாக தமிழ் திரையுலகில் எல்லா ஹீரோக்கும் கணிசமான ரசிகர்கள் உண்டு.. அப்படி இருக்க மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் தங்களது மனம் கவர்ந்த ஹீரோவுடன் இந்த இயக்குனர் இணைந்தால் நல்லாயிருக்கும் என எண்ணுவது அப்படி… அப்படி சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் காம்பினேஷனை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம் …

1.விஜய்-மணிரத்னம்

 

மாஸ் ஹீரோவான விஜய்-யை மணிரத்னம் இயக்க இருப்பதாக அப்ப அப்ப வந்ததிகள் வந்தாலும், இந்த காம்பினேஷன் எப்ப அமையும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து தான் இருக்கிறார்கள். கடைசியாக விஜய்-யை வைத்து ‘தளபதி 2’ படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவதால் அந்த செய்தி இன்று வரை வதந்தியாகவே உள்ளது… ஒருவேளை அமைந்தால் எப்படி இருக்கும்…

2.அஜீத் – ஷங்கர்

பல வருடங்களுக்கு முன்பே, மாஸ் ஹீரோவான அஜீத்தை வைத்து ‘ரோபோ’ படத்தை இயக்க திட்டமிட்டிருந்த நம்ப பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், அந்த வாய்ப்பு தவறி போனதனால் இந்த மெகா கூட்டணி இதுவரை அமையாமல் போனது. இந்த கூட்டணி எப்ப அமையும் என தல ரசிகர்கள் மட்டும் இல்லாமல், அனைத்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அப்படி இந்த கூட்டணி, ஒரு பைக் ரேஸ் கருவாக கொண்ட படத்தை எடுத்தால் எப்படி இருக்கும்…

3.ரஜினிகாந்த் – வெற்றிமாறன்

இந்த காம்பினேஷன் அமைந்தால் எப்படி இருக்கும்.. படு சூப்பராக இருக்கும்.. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வெற்றிமாறன், திரைக்கதையில் எதார்த்தத்தை காட்டி அசத்தி விடுவார். இதில் ரஜினிகாந்த் இணைந்தால் சொல்லவா வேண்டும்… பேட்ட படம் ஹிட்டானதால் இளம் இயக்குனர் பக்கம் ரஜினி கவனம் திரும்பியுள்ளது… அப்படி இருக்க இந்த கூட்டணி அமைய வாய்ப்பு உண்டு என எதிர்பார்க்கலாம்…

4.கமல்ஹாசன் – பாலா

தான் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் தான், தன் திரையுலகின் கடைசி படம் என்று கமல் சொல்லி விட்டாலும், இந்த கூட்டணிக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து தான் இருக்கின்றனர். நடிப்பில் கமல் அசத்துவார் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே ஆனாலும் கதை சரியாக அமைந்தால் ரசிகர்களுக்கு இந்த கூட்டணி விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

5.சூர்யா – அட்லீ

மாஸ் ஹீரோ விஜயை வைத்து 2 ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, அடுத்த சூர்யாவை வைத்து இயக்கப்போவதாக தகவல், ஆனால் அது வெறும் வதந்தி என்று தெரிய வர இந்த கூட்டணி அமைந்தால் கூட நல்லாதான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

6.விஜய் சேதுபதி – செல்வராகவன்

செல்வராகவன் படம் என்றாலே அதுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு.. அப்படியிருக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் செல்வராகவன் இணைந்தால் படு சூப்பராக இருக்கும். நடிப்பில் அசத்தி வரும் விஜய் சேதுபதி கதை மட்டும் சரியாக அமைந்துவிட்டால் நடிப்பில் அசத்திவிடுவார் நம்ம விஜய் சேதுபதி…

7.தனுஷ் – பா.ரஞ்சித்

சமூக அவலங்களை மட்டும் மையமாக கொண்டு படம் எடுக்கும் இயக்குனர் பா.ரஞ்சித், தனுஷை வைத்து படம் இயக்கினால் சூப்பராக இருக்கும் என அனைவரின் எதிர்பார்ப்பு. தேசிய விருது வென்ற தனுஷுக்கு நடிப்பில் திணி போடும் கதை என்றால் அலாதி ப்ரியம்… அவர் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களில் அவரது நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும்…

8.சிம்பு – கே.வி.ஆனந்த்

கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் சிம்பு நடிக்க வேண்டியிருந்தது. அந்த வாய்ப்பு தவறிப் போனதால், இதுவரை இந்த கூட்டணி அமைய வாய்ப்பு இல்லமால் போனது. கமர்சியல் படம் எடுப்பதில் வல்லவர் கே.வி.ஆனந்த், அப்படி இருக்க சிம்பு இணைந்தால் படம் சூப்பராக இருக்கும்..

இப்படி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் கூட்டணியை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் எந்த கூட்டணி அமைந்தால் உங்களுக்கு பிடிக்கும் என்பதை Comment-ல் தெரிவிக்கவும்…

Exit mobile version