திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தொரட்டி கொண்டு இளநீர் பறிக்க முயற்சித்த இருவர், உயர் அழுத்த மின் கம்பத்தில் இருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
பெருஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர், இரும்பு கம்பியாலான தொரட்டி கொண்டு இளநீர் பறிக்க முயற்சித்துள்ளார். அந்த கம்பி அருகே இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் சிக்கி, தட்சிணாமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. நின்ற இடத்திலேயே பற்றி எரிந்த தட்சணாமூர்த்தியை, அருகே இருந்த அவரது உறவினர் விஸ்வனாதன் என்பவர் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.