சிவகங்கை அருகே வீட்டு உரிமையாளர் இருக்கும்போது மாற்றுச்சாவி மூலம் வீட்டுக்குள் குடியேறியவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி பொய் சொல்லா மெய்யர் தெருவில் வசிக்கும் முத்துமணி என்பவர் தனது வீட்டை நாகராஜ் என்பவருக்கு 55 லட்சத்துக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். ஆவணங்களை தனது பெயருக்கு மாற்றிய பின் நாகராஜ் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்று விட்டார். இந்தநிலையில், முத்துமணி தன்னிடம் இருந்த மாற்றுச்சாவி மூலம் வீட்டை திறந்து குடியேறி உள்ளார். மராமத்துப்பணிகள் செய்ய, மதுரையில் இருந்து வந்த நாகராஜ் தனது வீட்டில் முத்துமணி குடியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் முத்துமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..