காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை: ஜக்கி வாசுதேவ்

காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்

ஈஷா யோக மையத்தின் சார்பாகக் காவிரி ஆற்றங்கரையில் 242 கோடி மரம் நடும் திட்டத்தின் ஒருபகுதியாகக் காவேரி குரல் என்ற இரு சக்கர வாகனப் பேரணி கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் தொடங்கியது. 11ஆவது நாளான நேற்று அந்தப் பேரணி தஞ்சாவூர் வந்தடைந்தது. அப்போது உரையாற்றிய, ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பிறக்கும் பெண் குழந்தைகளுக்குக் காவேரி எனப் பெயர் வைத்து புதிய எழுச்சியை உருவாக்குவோம் எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் யாரும் எடுக்கவில்லை எனவும், அப்படியெல்லாம் எடுக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

Exit mobile version