மாஸ்கோவில் இருந்து கிளம்பிய விமானம் மீது பறவை மோதியதால், இன்ஜின் கோளாறு ஏற்பட்டு சோளக்காட்டில் அவசர அவசரமாக தரையிறங்கியது. சாதுர்யமாக செயல்பட்டு 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு 233 பயணிகளுடன் யுரல் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 321 ரக விமானம் கிளம்பியது.
100 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்த போது பறவைகள் மீது, எதிர்பாரத விதமாக மோதியதால் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை அவசர அவசரமாக மாஸ்கோ புறநகரில் உள்ள சோளக்காட்டில் விமானி தரையிறக்கினார்.
விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரை, அந்நாட்டு மீடியாக்கள் ‘ஹீரோ’ எனவும், இன்ஜின் செயலிழந்த நிலையில், தரையிறக்கும் கியர் இல்லாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, பயணிகளின் உயிரை காத்த விமானியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.