நடிகர் சிம்புவின் திருமணம் எப்போது? டி.ராஜேந்தர் விளக்கம்…

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவுக்கு 37 வயதாகிறது. ஆனாலும் இன்னும் திருமணமாகவில்லை. இப்போது திருமணம் … அப்போது திருமணம் …. என்று சொல்லப்படும் போதெல்லாம்… ஏதாவது சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறார்.

திருமணம் தான் செய்துகொள்ளவில்லையே தவிர, காதலுக்கும் திருமணம் தொடர்பான பரபரப்புக்கும் அவர் பஞ்சமே வைத்ததில்லை. நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு காதல் முறிவு ஏற்பட்ட பிறகு வாலு படத்தில் நடிக்கும்போது ஹன்சிகாவைக் காதலித்தார். ஆனால் அதுவும் கைகூடவில்லை. அவர் நயன்தாராவைக் காதலிக்கும்போது ” தன் மகன் காதலிப்பது பெருமையான விஷயம்” என உற்சாகமாக பேட்டியளித்த டி.ராஜந்தர், கடந்த சில ஆண்டுகளாக மகன் எப்படியாவது திருமணத்தித்கு ஒத்துக்கொண்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

ஆனால் தொடர்ச்சியாக சிம்பு திருமணப் பேச்சுக்களை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்ததால், ” காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி…” என்று பாடாத குறையாக தன் இளைய மகன் குரளரசனுக்குத் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தார் டி.ராஜேந்தர். அதன் பிறகு லண்டனைச் சேர்ந்த சிம்புவின் உறவுக்காரப் பெண்ணோடு சிம்புவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கடந்த ஆண்டு மே மாதம் தகவல் வெளியானது. அதை மறுத்த சிம்பு, ” இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும், திருமணம் செய்யும்போது கண்டிப்பாக அறிவிப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், லண்டனில் உள்ள தூரத்து உறவினரின் பெண்ணுடன் சிம்புவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு ஜூன் 7ல் திருமணம் என்றும் தகவல் வெளியானது. அதுதொடர்பாக சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தரும் உஷா டி.ராஜேந்தரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ‘ சிம்பு திருமணம் தொடர்பாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள அவர்கள், சிம்புவின் ஜாதகத்திற்கு பொருத்தமானப் பெண்ணை பார்த்துக் கொண்டிப்பதாகவும், பெண் அமைந்தவுடன் மகிழ்ச்சியோடு அந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தாய்லாந்து சென்று உடலை ட்ரிம் செய்து திரும்பிய சிம்பு வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version