கடைசியாக நிலவையோ அல்லது இரவு வானத்தையோ எப்பொழுது ரசித்துப் பார்த்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? ஏழு வருடம் கழித்து இந்தாண்டில் வானில் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று நடக்க உள்ளது. அதுதான் சூப்பர் மூன். இந்த சூப்பர் மூன் நிகழ்வின் போது சாதாரணமாக இருக்கும் நிலவு மிகவும் பெரிதாகவும், அருகிலும் தோன்றும். இது நாளை (19.02.2019) பெளர்ணமி அன்று வானில் இரவு 9.30 மணி அளவில் தோன்ற உள்ளது. இதனை வெறும் கண்களால் நாம் காண முடியும். இதற்கு வேறு ஒரு பெயரும் உண்டு அதுவே பெரு நிலவு என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வானது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் சிறப்பாக தெரியும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த சூப்பர் மூன் நிகழ்வின் போது நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு பிரகாசமாகவும் தோன்றும்.
இந்த சூப்பர் மூன் நிகழ்வானது கடந்த 2011-ம் ஆண்டு விண்ணில் தோன்றியது. அதற்கு பிறகு இந்த வருடம் தான் இந்த நிகழ்வானது விண்ணில் தோன்றுகிறது. இந்த வருடம் வரும் சூப்பர் மூன்-னை பார்க்க தவறிவிட்டால் அடுத்த ஏழு வருடம் கழித்து அதாவது 2026-ம் ஆண்டு தான் விண்ணில் தோன்றும்.