சேலம் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது, பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவட்டிப்பட்டி அருகே உள்ள நைனாகாட்டில் வெங்கடேஷன் மற்றும் அவரது உறவினர்கள் 80 வருடங்களாக அரசு நிலத்தில் வசித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்கள் அரசு நிலத்திற்கு பட்டா வழங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறையினர் முயன்றனர். இதனை தடுத்து நிறுத்த முயன்ற வெங்கடேஷன் குடும்பத்தை சேர்ந்தவர்கள், உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அதனை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.