சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவது எப்போது?

பிற நாடுகளில் நிலவும் சூழலை பொறுத்தே இந்தியாவில் சர்வதேச விமானங்களை இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் சிக்கியிருந்த இரண்டு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது ஒருநாளைக்கு 700 விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அவை திறக்கப்பட்ட பிறகே சர்வதேச விமானங்களை இயக்க முடிவு செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார். தொடர்ந்து பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் பி.எஸ்.கரோலா, விமான கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்து ஆகஸ்ட் 24ம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version