"புதிய தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால், வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும்" – வாட்ஸ் ஆப் நிறுவனம்

புதிய தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால், பல வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் அளித்த விளக்கத்தில், மே 15ம் தேதிக்கு பிறகும் புதிய கொள்கைளை மறு ஆய்வு செய்ய அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன் பின் சில வாரங்களுக்குப் பிறகு நினைவூட்டல் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தது.

பின்னர், படிப்படியாக சேவைகள் ரத்து செய்யப்படும் எனக் கூறியுள்ள வாட்ஸ் அப் நிறுவனம், அதன் பிறகும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால், குறுந்தகவல் அனுப்புதல், இன்கம்மிங் கால்களும் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தது

Exit mobile version