வாட்ஸ் அப் ஹேக் செய்யப்படுகிறதா…? உண்மையை உடைத்த நிறுவனம்

வாட்ஸ்அப் “MP4 ஃபைல் மூலம் பயனாளர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்படுகிறது என்ற தகவல்களை வாட்ஸ்அப் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் ஆறாவது விரலாக செல்போன் மாறியது, அதிலும் குறிப்பாக “whatsapp” முக்கிய அங்கம் வகிக்கிறது என்று சொல்லலாம். காலையில் எழுந்தவுடன் Hey whatsapp என ஆரம்பிக்கும் அன்றைய நாள் bye whatsapp என முடிவடைகிறது.

பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் இந்த whatsapp கைக்குள் வைத்துள்ளது . அதுகேற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளர்களுக்கு நிறைய புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் “MP4 ஃபைல் மூலம் வாட்ஸ்அப் Account ஹேக் செய்யப்படுகிறது என்று சில தகவல்கள் வெளியானதை தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதில் இந்த MP4 மால்வேர் வைரஸ் மூலம் பயனாளர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதையும், எந்தெந்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் இது காணப்படுகிறது என்ற தகவலையும் வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.

அதாவது “வாட்ஸ்அப் ஸ்னூப்பிங் (WhatsApp Snooping)” மால்வேரான இது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட MP4 ஃபைல்களுடன் வருகிறது. இது, Remote Code Execution (RCE) மற்றும் Denial of Service (DoS) போன்ற சைபர் தாக்குதலைத் தூண்டும் திறனைக் கொண்டுள்ளது.

இதனால் பயனாளர்களின் முக்கியமான File- களைத் திருட மற்றும் சில வைரஸ்களைப் மொபைல்களில் பதிவிறக்க முடியும் என்றும் ஹேக்கர்கள் இந்த வாட்ஸ்அப் வைரஸ் – ஐ பயன்படுத்தி பயனாளர்களை கண்காணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

Remote code execution எனப்படும் இந்த RCE தாக்குதல்களைத் தொலைதூரத்தில் இருந்துகொண்டே ஹேக்கர்களால் நடத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வாட்ஸ்அப் ஸ்னூப்பிங்கை gbhackers.com எனும் வலைதளம் கண்டறிந்து இந்த வகையான பாதிப்புகள் சிக்கலானது என குறிப்பிட்டுள்ளது. இந்தப் புதிய ஆபத்து, WhatsApp v2.19.274-க்கு முந்தைய Android ஆப்களிலும் மற்றும் v2.19.100-க்கு முந்தைய iOS ஆப்களிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version