whatsapp குரூப்களில் இனி இந்த ஆப்ஷனை உபயோகிக்க முடியாது- ஏன் தெரியுமா?

தேவையில்லாத குரூப் -களிலிருந்து தப்பிக்க வாட்ஸ் அப் நிறுவனம் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி whatsapp Group களில் இடம்பெற்ற Nobady என்ற ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான பயன்பாட்டாளர்களால் உபயோகிக்கப்படும் செயலி வாட்ஸ் அப். இதில் நாம் மற்றவர்களிடம் தனியாக பேசுவதற்கும், குழுவாக சேர்ந்து உரையாடுவதற்கும் ஏற்ப வசதிகள் உள்ளன. பயன்பாட்டாளர்களை தக்க வைக்க அவ்வப்போது வாட்ஸ் அப் நிறுவனம் புது புது அப்டேட்டுகளை வெளியிடும்.

 இதில் Group chat களில் முதலில் நம் எண்கள் யாரிடம் உள்ளதோ அவர்கள் அதில் நம்மை இணைத்தார்கள். பின் அந்த வசதி Group – களின் லிங்க் இருந்தால் யார் தயவும் இல்லாமல் நாமாகவே அதில் இணையலாம் என்ற வசதியை கொண்டு வந்தது. பின் அதிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு Everyone, My contacts,Nobady ஆகியவை ஆப்ஷன்களாக கொடுக்கப்பட்டன. ஆனாலும் Group- களில் சில நேரம் அறிமுகமில்லாத எண்களில் இருந்து அழைப்புகள், தேவையற்ற செய்திகள் என பயன்பாட்டாளர்கள் பல பிரச்சனைகளை சந்தித்தார்கள்.

தற்போது அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. அதன்படி ஏற்கனவே இருந்த ஆப்ஷன்களில் Nobady என்ற தேர்வு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக My contacts Excepts புதிதாக இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் நாம் தேர்வு செய்யும் நபர்களால் மட்டுமே நம்மை மற்ற குழுவில் இணைக்க முடியும். சமீபத்திய வாட்ஸ் அப் அப்டேட்டுகளை பெற்றவர்கள் whatsapp settings > account > Privacy > Group என்ற ஆப்ஷன்களில் சென்று அதில் உள்ள Everyone, My contacts , My contacts Excepts போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். 

எப்படி நாம் status பதிவுகள் இடும் போது Everyone, My contacts , My contacts Excepts ஆப்ஷன்கள் உதவியாக இருக்குமோ….அதேபோல் whatsapp Group தொல்லைகளிலிருந்தும் இனிமேலாவது தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version