நிலவின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது? மர்மம்

சீனா பல அறிய வின்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக நிலவையும் ஆய்வு செய்து வருகிறது.

சீனாவின் வின்வெளி ஆய்வு நிலையம் சாங் இ-4 என்ற விண்கலத்தை அனுப்பி உள்ள நிலையில், அது கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தரை இறங்கியுள்ளது.

அதன் மூலம் நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

நிலவின் பின் பகுதியை மட்டும் இதுவரை யாராலும் பார்க்க முடியவில்லை. இதுவரை பல்வேறு ஆராய்ச்சிகள் உலக நாடுகள் செய்து வந்தாலும் நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்வது குறித்து முதலலில் துவங்கியது சீனாதான்.

பூமியை போல் இல்லாமல் நிலவில் சற்று வேறுபட்ட கால சூழல் இருக்கிறது. நிலவில் பகலில் அதிக வெப்பம் இருக்கும் அதே போல் இரவில் கடும் குளிர் இருக்கும். விஞ்ஞானிகளின் கணக்குபடி பகலில் 127டிகிரி செல்சியஸ் வெப்பமாகவும், இரவில் -183 டிகிரி செல்சியஸ் உறை பனியாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளனர். இன்னும் பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் வெளிவந்தால் மட்டுமே நிலவின் மறுபக்கம் பற்றி நமக்கு தெரியவரும்.

Exit mobile version