என்ன நடக்கிறது எல்லையில்? உயிர் கொடுத்து எல்லையை காக்கும் ராணுவம்!!

இந்திய எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதற்காக மீண்டும், மீண்டும் சீனா எல்லையில் தொல்லையாக இருந்து வருகிறது? இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன? அறிந்து கொள்வோம் வாருங்கள்..

இந்தியாவும் சீனாவும் 3488 கி.மீ. தொலைவுக்கு எல்லையைக் கொண்டுள்ளன. இதில் லடாக்கில் அமைந்துள்ள பாங்கோங் த்சோ ((PANGONG TSO)) ஏரி தான் தற்போதைய சர்ச்சைகளுக்கு காரணம். அந்த ஏரியை உரிமை கொண்டாடி வருகிறது சீனா. இதுதொடர்பான மோதலில் கடந்த ஜுன் மாதம் 16-ந் தேதி இந்திய வீரர்கள் 20 பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.

இதையடுத்து இருநாடுகள் இடையே அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சீன ராணுவம் எல்லையில் இருந்து பின்வாங்கியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் பாங்கோங் த்சோ ஏரியில் அத்துமீறலை அரங்கேற்றி வருகிறது சீனா. மீண்டும் மீண்டும் எல்லையில் தொல்லை கொடுக்க என்ன காரணம்?

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா சாலைகளை அமைத்து வருகிறது. அது சீனாவுக்கு பொறுக்கவில்லை. அவ்வாறு சாலை போடக்கூடாது என்பதற்காக பாங்கோங்த்சோ ஏரியில் விளையாட்டு காட்டி வருகிறது. மறுபுறம் எல்லையெங்கும் அதிநவீன சாலைகளை சீனா அமைத்துள்ளது. ஆனால் சீனாவின் சலசலப்புகளை புறந்தள்ளி கிழக்கு லடாக்கில் 255 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்து வருகிறது இந்தியா. இந்த சாலை வழியாக சீன எல்லைக்குள் நம்மால் எளிதில் நுழைந்து விட முடியும். இதுதான் சீனாவின் பதற்றத்திற்கு காரணம்.

இருநாட்டு எல்லைப் பிரச்னைகளை தீர்ப்பதற்காக இந்தியாவும் – சீனாவும் சிறப்பு பிரதிநிதிகளை நியமித்துள்ளன. இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இருநாட்டு வீரர்கள் எல்லையில் அத்துமீறும் போது இவர்கள் அமர்ந்து பேசி சமூக முடிவு எடுப்பார்கள். பாங்கோங்த்சோ ஏரி விவகாரமும் இவர்களின் பேச்சுவார்த்தை பட்டியலில் உள்ளது.

பேச்சுவார்த்தையால் மட்டுமே நிலைமையை சரிசெய்ய நினைக்கிறது இந்தியா, ஆனால் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபடுகிறது சீனா. இந்த விளையாட்டு தான் எல்லையில் தீராத தொல்லையாக இருந்து வருகிறது.

Exit mobile version