வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் குறித்து மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் வாட்ஸ் அப் பேமெண்ட்.கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு கடும் போட்டி தற்போது நிலவி வருகிறது.. இந்நிலையில் WhatsApp Pay அப்டேட் உலகம் முழுவதும் எப்போது முழுவீச்சில் அறிமுகப்படுத்தப்படும் என கேள்விக்கு பதில் அளித்துள்ள மார்க் ஜுக்கர்பெர்க், அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகளை WhatsApp நிறுவனம் மேற்கொண்டு மேற்கொண்டு வருகிறது எனவும் டிஜிட்டல் கட்டண வணிகத்திற்கான உரிமம் இதுவரை WhatsApp Pay-க்கு வழங்கப்படவில்லை எனவும் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மேலும் WhatsApp Pay அப்டேட் செயல்பாட்டிற்கு வந்தால் நீங்கள் புகைப்படங்களை எளிதாக விரைவாக அனுப்புவது போல பணத்தை அனுப்ப முடியும் என தெரிவித்த மார்க், WhatsApp பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், Pay அப்டேட் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தும் போது மிக பெரிய வரவேற்பை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்