ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஈரோடு வடக்கு வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில், மதுபானங்கள் கூடுதல் விலை வசூலிக்க கூடாது என்று, அமைச்சர் கூறி இருப்பது குறித்து வாடிக்கையாளர் கேட்டதற்கு, அமைச்சர் சொல்லுவார் அவருக்கு என்ன என்று டாஸ்மாக் விற்பனையாளர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.
கூடுதல் விலை குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு முறையாக பதிலளிக்காமல் விற்பனையாளர்கள் நடந்து கொள்வதாக மதுப்பிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே, மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள மதுப்பிரியர்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.