சிறார் இலக்கியம் குறைவதற்கான காரணம் என்ன ? சிறப்பு தொகுப்பு

தற்போது சிறார் இலக்கியம் என்பது அதிக அளவில் குறைந்து வருகிறது. சிறார் இலக்கியம் குறைவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு..

வளர்ந்து வரும் நவீன காலத்திற்கு ஏற்றாற்ப்போல மக்களும் டெக்னாலஜி-யை தேடியே ஓடிகொண்டிருக்கின்றன, அந்த வகையில் சிறார் இலக்கியம் என்பது தற்போது மக்களிடையே சிறிது இல்லாமல் போய்விட்டது.

சிறார்கள் எழுதவும் படிக்கவும் பழகிக்கொள்ளகூடியது தான் சிறார் இலக்கியம் என்று எண்ணிவிடக்கூடாது. அதையும் தாண்டி அவர்கள் எளிதில் பாடத்தை புரிந்துகொள்ளும் விதமாகவும் அதைப் பற்றிய கற்பனைகள் எழத் துண்டும் விதத்தில் இருக்க வேண்டும். எளிமையாகவும் குழந்தைகள் புரிந்துகொள்ளும் மழலை மொழியிலும் இருத்தலே சிறார் இலக்கியத்திற்கான இலக்கணம்.

தொலைக்காட்சி, கணினி, மொபைல் போன்றவை குழந்தைகளை தம் பக்கம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக குழந்தைகளின் வாசிப்பு பழக்கம் மெல்ல மெல்லகுறையத் தொடங்கியது. மொபைல் போனில் முகம்பார்த்து எழும் இந்த நவீன காலத்தில் அது குழந்தைகளின் கையிலும் தவழுவதால், சிறார்களுக்கு இலக்கிய வாசிப்பு என்பது எட்டாக் கனியாகவே மாறிப்போகிறது. குழந்தைகளின் எண்ணங்களை பிரதிபலிக்கிறோம், அவர்களின் கற்பனைத்திறனை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் வெளியிடப்படும் காணொளிகள் பெரும்பாலும் அவர்களின் கற்பனை ஆற்றலை ஒரு எல்லைக்குள் வைத்துக்கொள்வதாகவே இருக்கின்றன.

பொழுதுபோக்கிற்காக கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று திசைமாறிச் செல்லும் சிறார்களை சிறார் இலக்கியங்களை நோக்கி திசைதிருப்பு வேண்டியது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்ளுக்கும் உள்ள தலையாயக் கடமை.

Exit mobile version