இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

இந்தியாவுக்கு எதிரான 4 வது ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெறும் 92 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. ரொம்ப நாட்களுக்கு பிறகு இந்திய அணியின் மோசமான தோல்வி இது. இந்தியாவின் பேட்டிங் எப்போதும் வலுவாக இருக்கும், ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாகவே இருந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

ஆடுகளம் வேக பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்ப நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சும் சூப்பராக இருந்தது. அந்த அணியின் ட்ரெண்ட் போல்ட் (5 விக்கெட்டை வீழ்த்தினார்) அருமையாக ஸ்விங் செய்து வலுவான இந்திய பேட்டிங்கை ஒரு கை பார்த்தார். அதே போல் அந்த அணியின் மித வேகப் பந்து வீச்சாளர் கிராண்ட் டி ஹோமிற்கும் (3 விக்கெட்டை வீழ்த்தினார்) இந்த ஆடு களம் ஒத்துழைத்தது.

குறிப்பாக ராயுடு, கில், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் மிடில் வரிசையும் ரன் குவிக்க தவறிவிட்டது. வரிசையாக இந்திய அணி, ஒருநாள் போட்டியில் வென்று இருந்தாலும், இந்த தோல்வி ஒரு சின்ன பாடமாக இருக்கும் தவிர, பயப்படும் அளவிற்கு இருக்காது என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version