சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி அடுத்த நடவடிக்கைகள் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பார்க்கலாம்.
மசூத் அசாருக்கு எதிராக ஆயுதத்தடை, சர்வதேச பயணத் தடை, சொத்துக்கள் முடக்கம் போன்ற நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அவரது இயக்கம் நிதி வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்படும்.
மசூத் அசார், அவரது நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் நெருக்கமானவர்கள் யார் என கண்டறிந்து அவர்களது வருமானம் குறித்து விசாரிக்கப்படும். மசூத் அசாருக்கோ அவரது அமைப்பிற்கோ எந்த ஒரு நபரும், நிறுவனமும் ஆயுதங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விற்க தடை விதிக்கப்படும்.
மசூத் அசாரின் ஜெய் இ முகமது அமைப்பின் மாணவர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான், தற்போது ஐநாவின் முடிவால் அந்தநாட்டில் மசூத் அசாரின் புகைப்படத்தை ஒட்டுவதற்கோ அல்லது பிரசாரங்கள் செய்யவோ தடை விதிக்கப்படும்.