நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் கடைசி ஆசை என்ன?

நிர்பயா வழக்கில் தூக்கிலிடப்படவுள்ள 4 குற்றவாளிகளின் கடைசி ஆசை என்னவென்று சிறை அதிகாரிகள் கேட்டுள்ள நிலையில், அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குற்றவாளி என்பதால் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. தூக்கு தண்டனையை எதிர் நோக்கி காத்திருக்கு குற்றவாளிகளிடம், அவர்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுவது வழக்கம். அதன்படி முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோரிடம் கடைசி ஆசை என்ன என்பதை தெரிவிக்குமாறு திகார் சிறை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதுவரை 4 பேரும் தங்களின் கடைசி ஆசை பற்றிய விவரங்களை தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகின்றனர். இருப்பினும் அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version