திமுக எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து காலமான நிலையில், சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 98 ஆக குறைந்துள்ளது.
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் 124 பேரும், திமுக உறுப்பினர்கள் 98 பேரும் உள்ளனர். காங்கிரசில் 7 பேரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும், சுயேட்சையாக வெற்றி பெற்ற தினகரனும், சபாநாயகர் என மொத்தம் 232 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.
சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம்
அதிமுக உறுப்பினர்கள் – 124 + 1
திமுக உறுப்பினர்கள் – 98
காங்கிரஸ் உறுப்பினர்கள் – 7
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1
சுயேட்சை ( தினகரன் ) – 1
சபாநாயகர் – 1
காலியிடம் – 2
உறுப்பினர்களின் மறைவு பற்றி தமிழக சட்டப்பேரவை செயலகம் மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுக்கு தெரியப்படுத்தப்படும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இருவரின் மறைவைப்பற்றி தெரியப்படுத்துவார். இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தால் ஆறு மாதத்திற்குள் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.