நீட் தேர்வு இந்த ஆண்டு நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பத்தில் தமிழக மாணவர்கள் உள்ளதால், அதனை திமுக அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு வாக்குறுதியின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
நீட் தேர்வு இந்தாண்டு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் இருப்பதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதனை திமுக அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை நிலவுவதாகவும், விஞ்ஞான உலகத்தில், மின்வெட்டுக்கு அணிலை காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல என்பதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து.