தேர்தலில், என்னென்ன ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்க முடியும்

வாக்களிப்பது நமது ஜனநாயக கடமையாகும், இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை தவிர வேறு என்னென்ன ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு இருப்பின், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அரசு நிறுவனங்களின் புகைப்பட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், பான் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு,100 நாள் வேலைத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் மற்றும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பூத் சிலிப் உடன் எடுத்துச் சென்றால், நமது ஜனநாயக கடமையான வாக்களித்தலை எளிதில் நிறைவேற்றலாம்.

Exit mobile version