அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இடம்பெற்றிருந்த முக்கியமானவற்றை மட்டும் சற்று சுருக்கமாக காண்போம்.
காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மத்திய ஆசிய நாடுகளில் சிக்கி இருந்த தமிழர்களை மத்திய பாஜக அரசு மீட்டு தாயகம் அழைத்து வந்ததாக கூறினார்.
இதேபோல் பாஜக அரசின் முயற்சியால் இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியதாக கூறிய பிரதமர் மோடி,
காஞ்சிபுரம் நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜவுளித்துறைக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் அரசை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு கலைத்ததை சுட்டிக் காட்டிய அவர்,
அரசியல் சாசன சட்டத்தின் 356 பிரிவை தவறாக பயன்படுத்தி 50 அரசுகளை கவிழ்த்தவர் இந்திரா காந்தி என கூறினார்.
எதிர்க்கட்சிகள் வலிமையான இந்தியாவையும், வலிமையான ராணுவத்தையும் விரும்பவில்லை பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.