முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் மூலம் 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் தமிழகத்திற்கு வரவுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த துரைபாக்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி பொதுக் கூட்டம் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தால் சுமார் 8 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளதை சுட்டிக் காட்டினார். மேலும் திமுக ஆட்சியின் போது வெளிநாடு சென்ற ஸ்டாலின் சாதித்தது என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.