கொலை மிரட்டல் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

விடியா திமுக அரசின் ஆட்சியில் சென்னையில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது நில மோசடி, பண மோசடி, ஆன்லைன் குற்றங்கள் என அனைத்து விதமான குற்றங்கள் அதிகரிக்கும் நகரமாக சென்னை மாறியுள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 517 சைபர் கிரைம் குற்றங்கள் நடந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 565 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கணிணி வழியாக நடத்தப்பட்ட குற்றங்களுக்கு வெளிமாநிலங்களை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் 236 பேர் தலைமறைவாக இருப்பதாகவும், குறிப்பாக விடியா திமுக ஆட்சியில் நில மோசடி தொடர்பான ரூ.81 கோடியே 98 லட்சம் மோசடி செய்யப்பட்டு இருப்பாகவும் 2022 இன் சாதனையாக சென்னை காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கொலை, கொள்ளை என மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வரும் நிலையில், விடியா திமுக ஆட்சியில் செயலற்ற காவல்துறையால் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்தும், வெளிமாநில குற்றவாளிகளால் குற்றங்களை செயல்படுத்தப்படும் மையமாக தமிழகத்தை மாற்றியிருப்பதும் தான் விடியா அரசின் சாதனையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் திமுகவினரால் அரங்கேற கூடிய வன்முறை சம்பவங்களில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் இல்லை. குறிப்பாக சைதாப்பேட்டை சாதிக் என்பவர் நடிகைகள் குஷ்பூ, கௌதமி, நமிதா போன்றவர்களை ஆபாசமாக பேசியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் ஆளுநரை பார்த்து போயா போ என்று கையை உயர்த்தி பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை. இதற்கெல்லாம் மேலாக திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை சுட்டுத் தள்ளுவேன் என்றும் அநாகரிகமான வார்த்தைகளால் வசை பாடியதற்கும் கைது நடவடிக்கை இல்லை.

சென்னை விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளித்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர்களையும் கைது செய்யவில்லை. இந்த லட்சணத்தில் வெளி மாநில கொள்ளையர்கள் மீது பழியை போட்டுவிட்டு, தமிழகத்தில் நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கும், கொலைவெறி பேச்சுக்களுக்கும், தீவிரவாத அச்சுறுத்தலுக்கும் யார் பொறுப்பேற்க போகிறார்கள் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

Exit mobile version