மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 5வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த பருவ மழையால் 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் அணை 16 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு அணையில் இருந்து வினாடிக்கு 273 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதுடன், திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 5வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version