கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பிரபலமானதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பங்கு உண்டு. கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருந்தாலும், 1970ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை கிரிக்கெட்டில் மிக வலுவான அணியாக வெஸ்ட் இண்டீஸ் திகழ்ந்தது. அதன் பின் வீரர்கள் தேர்வு கோளறுபடி, ஊதிய பிரச்சனை என அந்த அணி சற்று வலு இழந்த அணியாகவே காணப்பட்டது. குறிப்பாக டெஸ்ட் போட்டியில் அந்த அணி மிகவும் வலு குறைந்த அணியாகவே காணப்பட்டது.
2007ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகள் ரசிகர்கள் இடையே அதிகம் வரவேற்பை பெற்றது. இவ்வகையான போட்டியில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக வலிமை மிக்க அணியாக திகழ்ந்தது. 2 முறை டி20 உலக கோப்பையை அந்த வென்றுள்ளது. தற்போது அந்த அணி டி 20 தவிர மற்ற வடிவிலான போட்டிகளிலும் கவனம் செலுத்த வேண்டி நிலையில் இருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ்-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பவாதற்கு முன்னால், இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெப்ரி போய்கொட், வெஸ்ட் இண்டீஸ் அணியை தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அதாவது, “very ordinary, average cricketers” என்று வெஸ்ட் இண்டீஸ் அணியை விமர்சனம் செய்தார். அவரது இந்த விமர்சனத்திற்கு கிரிக்கெட் உலகில் கண்டன குரல் எழும்பியது.
இந்த பரபரப்பான சூழல் நிலையில், டெஸ்ட் தொடர் ஆரம்பமானது. முதல் போட்டி பிரிட்ஜ் டவுன்-ல் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கிலும், பவுலிங்களிலும் அசத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் தான் கிங் என்று சொல்லி வந்த இங்கிலாந்து அணியை திணரவைத்தது. அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தியது.
முதல் போட்டியில் கண்ட தோல்வியை மறந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தக்க பதிலடி தர வேண்டும் என இங்கிலாந்து அணி நினைத்தது. ஆனால் 2வது டெஸ்ட் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கையே ஓங்கி நின்றது. 2வது டெஸ்ட் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக ஆடி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிக விரும்பப்படும் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வெற்றி ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சத்திற்கே கொண்டு சேர்த்துள்ளது. “யாரையும் குறைவாக எண்ணக் கூடாது” என்பதற்கு இந்த வெற்றி சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெப்ரி போய்கொட், வெஸ்ட் இண்டீஸ் அணியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததற்கு தக்க பதிலடியை தங்கள் திறமை மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் நிரூபித்துள்ளனர். தற்போது “very ordinary cricket by england” என்று கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.