மேற்கிந்திய அணி 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆண்டிகுவாவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக ரஹானே 81 ரன்களை எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இஷாந்த் சர்மாவின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 10 ரன்களிலும், கம்மிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Exit mobile version