மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏற்கெனவே 7 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளில் இறுதிக் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
அம்மாநிலத்தில் திரிணாமுல், பாஜக, இடசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை காரணமாக, முக்கிய அரசியல் தலைவர்கள் காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டனர்.
இன்று நடைபெற்று வரும் இறுதிக்கட்டத் தேர்தலில், 283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
84 லட்சத்து 77 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கலவரங்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.