குற்றவாளிகளை காப்பாற்ற மேற்கு வங்க போலீசார் மும்முரம்: பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரசாரை காப்பாற்ற மாநில போலீசார் தடயங்களை அழிக்க முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், கொல்கத்தாவில் வன்முறையை நிகழ்த்தியது திரிணாமுல் காங்கிரசார் தான் என்று கூறினார். இந்தநிலையில் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலையை அக்கட்சியினரே உடைத்ததாக குற்றம்சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, திரிணாமுல் காங்கிரசாரை காப்பாற்ற அம்மாநில போலீசார் தடயங்களை அழிக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.

தோல்வி பயத்தின் காரணமான விரக்தியால் தன்னை சிறையில் அடைப்பேன் என மம்தா பானர்ஜி மிரட்டுவதாகவும் அவர் கூறினார். இதனிடையே மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரசார் நரகமாக்கிவிட்டதாகவும், மம்தாவும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியும் மேற்கு வங்கத்தை கொள்ளை அடிப்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version