3 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்று ஆண்டுகளில் 34 லட்சத்து 34 ஆயிரத்து 528 பயனாளிகளுக்கு,  22 ஆயிரத்து 237 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூதெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் கிராமத்தில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை, 8 சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை அமைச்சர் செல்லூர் ராஜூதொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு,  திமுக ஆட்சியில் இருந்த போது, 5 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 163 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 3 ஆண்டுகளில் 34 லட்சத்து 34 ஆயிரத்து 528 பயனாளிகளுக்கு,  22 ஆயிரத்து 237 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளதாக கூறினார்.

Exit mobile version