பல்வேறு இடங்களில் புதிய திட்டங்கள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மகப்பேறு மற்றும் குழந்தை பிரிவு கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் புதிய மகப்பேறு பிரிவு கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், அதனை சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடத்தில் நான்கு நவீன அறுவை சிகிச்சை கூடம், 250 படுக்கை வசதிகள், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை கூடம், மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை கூடம் உள்ளிட பல்வேறு வசதகளுடன் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கான புதிய கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 2 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் இந்த புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் பொன்னையா, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் 2 கோடியே 68 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் அரசினர் தொழிற் பயிற்சி மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் தூசி மோகன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version