மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற விழாவில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
செஞ்சியில் அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏழை, எளிய பொதுமக்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேட்டி, சேலை, தையல் இயந்திரம், எரிவாயு அடுப்பு, மாற்றுதிறனாளிகளுக்கு மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி ஏழுமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.