புத்தாண்டை வரவேற்கும் விதமாக நடைபெற்ற சாக்லெட் திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சாக்லெட் திருவிழா நடைபெற்றது.

உதகையில் 20-20 என்ற தலைப்பில், ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், பாரம்பரிய உணவுகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் சாக்லெட் திருவிழா நடைபெற்றது. சாக்லெட் மியூசியத்தில் நடைபெற்ற இந்த திருவிழாவில், பூமத்திய ரேகை வடக்கு மற்றும் தெற்கில் 20 டிகிரியில் கோகோ மரம் வளரும் விதத்தை எடுத்துக் கூறும் வகையில், 20 – 20 வடிவத்தில் 120 கிலோ எடையில் காட்சிப்படுத்தப்பட்டது. பண்டைய கால நாகரிகம், இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறை, உணவுப் பழக்கங்கள் போன்றவற்றை, வருங்கால சமுதாயத்திற்கு நினைவூட்டும் வகையில், சாக்லேட் மூலம் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. சாக்லெட் திருவிழாவில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு, சாக்லெட்டின் வரலாறு மற்றும் உற்பத்தி முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Exit mobile version