அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதலமைச்சருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக 10 நாட்கள் அரசு முறை பயணமாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா சென்றடைந்தார். சிகாகோவில் தமிழ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  அங்குள்ள தமிழ் மக்களிடம் உரையாடுகிறார்.

இதைத் தொடர்ந்து வாஷிங்டன், நியூயார்க், ஹூஸ்டன் ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் துணை முதலமைச்சர் அங்கு செயல்பாட்டில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். இந்த நிலையில், இன்று காலை சிகாகோ விமான நிலையம் சென்றடைந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க வாழ் தமிழர்கள் துணை முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version