ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டத்தை வரவேற்கிறேன்: அர்ஜூன் சம்பத்

தமிழக அரசின் ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டத்தை வரவேற்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படித்தவர்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும், விவசாயியான எடப்பாடி பழனிசாமி தனது உழைப்பால் முதல்வரானதால், ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். ரஜினியை பார்த்து ஸ்டாலின் அச்சம் கொள்வதாகவும் அர்ஜூன் சம்பத் விமர்சித்தார்.

Exit mobile version