நாகையில் நடைபெறும் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நீடாமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்றனர்.சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் முதலமைச்சருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார். பின்னர் வரவேற்பு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் துயர் துடைப்பதே தமிழக அரசின் நோக்கம் என குறிப்பிட்டார்.