சிதம்பரம் ரயில் நிலையத்தில் புவனேஸ்வர் – ராமேஸ்வரம் விரைவு ரயில், இன்று முதல் நின்று செல்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
புனித தலங்களை இணைக்கும் புவனேஸ்வர் – ராமேஸ்வரம் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை அதிமுக சிதம்பரம் தொகுதி எம்.பி. சந்திரகாசியும் எழுப்பி வந்தார். இதனையடுத்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சிதம்பரம் வந்த ரயிலுக்கு சந்திரகாசி எம்.பி. மற்றும் பொதுமக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். ரயில் பயணிளுக்கு, லட்டுகளை வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, சிதம்பரம் – ஜெயங்கொண்டம் ரயில் பாதை திட்டம் குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று கூறினார்.