இந்திய அளவில் விளையாட்டுத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ள நிலையில் இளைஞர்களை ஊக்கப்படுத்த அரசு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என பளுதூக்கும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ஆவடியில் சென்னை மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பளுதூக்கும் வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாவட்ட பளுதூக்கும் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லிஜி குமார், பளுதூக்கும் போட்டியினால் இளைஞர் உடல் தகுதி, மன உறுதியுடன் ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பதாக கூறியுள்ளார். தமிழக அரசு விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருவதாகவும், மேலும், இந்திய அளவில் விளையாட்டுத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது எனவும், இதனால் அரசு வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.