இந்தியாவில் பிறக்கும் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து உலக பட்டிணி குறியீடு அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. உலக பட்டினிகுறியீட்டில் மொத்தமுள்ள 119 நாடுகளில் இந்தியா 103 வது இடத்தை பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 இடங்கள் கீழிறங்கியுள்ளது.நமது நாட்டில் பிறக்கும் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு கிடைப்பதில்லை.
குறிப்பாக இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் , எடைக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருக்கிறார்கள்.குழந்தைகளின் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருக்கும் குறைபாடு என்பது தெற்காசியாவில் பரவலாக இருக்கிறது என்றும் , இது களையப்பட வேண்டிய விஷயம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தக் குறைபாட்டை சிறுவயதில் இருந்தே தடுக்க குழந்தைகளுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுதலைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், பெண்கள் தங்களின் பேறுகாலத்தில் போதுமான சத்துள்ள உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தபின் தாய்ப்பாலை முறையாகக் கொடுக்காமல் இருப்பதாலும் இந்த வயதுக்கு ஏற்ற எடை இல்லா குழந்தைகள் உருவாக காரணமாகக் கூறப்படுகிறது.