மத்திய அரசின் தீவிர முயற்சியால் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 7.27 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகம், கண்காணிப்பு, தொழில்நுட்பம், மீட்பு நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய அடிப்படை கூறுகளில் விரிவான சீர்திருத்தங்களை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவற்றின் வாராக் கடன் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
2018 மார்ச் மாத நிலவரப்படி 8.96 லட்சம் கோடி ரூபாயாக காணப்பட்ட பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 2019 செப்டம்பரில் 7.27 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுக்குள் 2.3 லட்சம் கோடி வாராக் கடன்கள் மீட்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.